சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாணவர்களுக்கான கலைத் திருவிழா நடைபெற்றது. இந்த கலைத் திருவிழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார். இதையடுத்து கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியபோது “மாணவர்கள் படிப்பு முடிந்ததும் வேலைக்கு சென்றோம், திருமணம் நடந்தது, கை நிறைய பணம் சம்பாதித்தோம் என்று நிறைவடைந்து விடக்கூடாது என்று கூறினார். மேலும் கலைத் தொண்டினையும் தொடர வேண்டும். அறிவு கலை, கல்வி மற்றும் பகுத்தறிவாக வளர வேண்டும் என மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.