பிரபல நடிகை பல்லவி ஜோஷி படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெறும் வேக்‌ஷின் வார் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் இவர் நடித்த வருகின்றார். அந்த படப்பிடிப்பு தளத்தில் கார் ஓட்டும் காட்சி ஒன்றில் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்தில் சிக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது கணவர் விவேக் அக்னிஹோத்ரி இந்த படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.