படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்து … அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பிய நடிகர் ஜெயசூர்யா…!!!

படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்தில் நடிகர் ஜெயசூர்யா அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியுள்ளார் .

மலையாள திரையுலகில் துணை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஜெயசூர்யா . இவர் தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ், சக்கரவியூகம் ,மனதோடு மழைக்காலம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் மலையாளத்தில் ‘வெள்ளம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார் . இயக்குனர் பிரஜேசன் இயக்கும் இந்த படத்தில் பைஜு, சித்திக், ஸ்ரீலட்சுமி ,இடைவேளை பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய நடிகர் ஜெயசூர்யா !  - Tamil Movie Cinema News

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் இருந்து நடிகர் ஜெயசூர்யா அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார் . டிரில்லர் வாகனத்தை இயக்கியபடி அவர் நடந்து வர வேண்டிய காட்சியில் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை மீறி நடிகர் ஜெயசூர்யாவை இழுத்துச் சென்றுள்ளது. வாகனம் விழ இருந்த இடம் பெரிய பள்ளம் என்பதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர் . இதையடுத்து படக்குழுவினர் விரைந்து சென்று ஜெயசூர்யாவை பிடித்து இழுத்தால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியுள்ளார் .