வாரிசு, துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. வசூல் ரீதியாகவும் சக்கைபோடு போட்டு வருகிறது. இரண்டு படங்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.  ரசிகர்கள் இதனை கொண்டாடினார்கள். அப்படி நேற்று முன்தினம் துணிவு படம் வெளியான போது சென்னை ரோகினி திரையரங்கில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர் லாரியில் இருந்து விழுந்து பலியானார்.

இதுகுறித்து நேற்றைய பேட்டியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உயிரைவிடும் அளவுக்கு கொண்டாட்டம் அவசியம் இல்லை. இது பொழுதுபோக்கு என்பதை புரிந்துகொண்டு சந்தோஷமாக படம் பார்த்துவிட்டு பத்திரமாக செல்ல வேண்டும். உயிரை கொடுக்கும் உ அளவுக்கு ஏதும் இல்லை என்று அறிவுரை கூறினார்.