படகு கவிழ்ந்ததில் மீனவர் பலி….. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. குமரியில் பெரும் பரபரப்பு….!!!

மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் இருந்து 4 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது திடீரென படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த சைமன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் உடலை மற்ற மீனவர்கள் மீது குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை தெரிந்து கொண்ட மீனவ கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இவர்கள் அரசு பேருந்துகளை சிறைபிடித்தும் சாலை இணைப்புகளில் கயிறுகள் கட்டி தடுப்புகள் அமைத்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து முடங்கி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர்கள் இறந்த மீனவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பிறகு சீரமைக்கப்படாமல் இருக்கும் துறைமுகத்தை சீரமைத்து முகத்துவாரம் அமைக்க வேண்டும் எனவும் கூறினார். இது தொடர்பாக குளச்சல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத மக்கள் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர். அந்த சூழலில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து மக்களுடன் அமர்ந்து திடீரென அவரும் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராமகிருஷ்ணன் துறைமுகத்தை சீரமைப்பதற்கான பணிகள் நாளை முதல் நடைபெறும் என்று கூறினார். ஆனால் அமைச்சர் நேரில் வந்து உறுதி அளிக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவ மக்கள் கூறியதால் தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *