பசும்பாலை விட ஆட்டுப்பால் மிகவும் நல்லது… ஏன் தெரியுமா…? இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

பசும் பாலை விட ஆட்டுப் பாலில் தான் அதிகம் சத்துக்கள் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம்.

பசும்பால் ஆனது அனைத்தையும் குணப்படுத்தும் ஒரு வகை உணவு.  இதில் இரும்பு , தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள லாக்டோஸ் காரணமாக இரைப்பை பிரச்சனை ஏற்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒப்பிடும்போது ஆட்டுப்பாலில் குறைவான சர்க்கரை இருப்பதால் பெரியவர்களுக்கு பசும் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொடுக்கலாம் என்று கூறுகின்றனர். அதேசமயம்  பாலை நேசிப்பவராகவும் மாட்டு பாலை ஜீரணிக்க முடியாதவராகவும் இருந்தால் மாட்டு பாலுக்கு பதிலாக நீங்கள் ஆட்டு பாலை உபயோகிக்கலாம்.

ஆட்டு பால் நிறைய நோய்களை குணப்படுத்துகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. டெங்கு மற்றும் பிற நோய்களின் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு இயற்கை நிவாரணியாக பயன்படுகிறது. ஆட்டுப் பாலில் காணப்படும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நல்ல செரிமான சக்தியை கொடுக்கும். இதனால் உடல் நல்ல வளமுடன் இருக்கும். செரிமானம் குறைவாக உள்ள நபர்களுக்கு ஆட்டு பால் மிகவும் சிறந்தது. ஆட்டுப்பால் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் மூலமாக உள்ளது. இது வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு போதுமான அளவில் ஆற்றலை வழங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *