தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகர் கர்னூல் மாவட்டம் வட்டமோன் கிராமத்தில் திருப்பத்தையா என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சொந்த வேலை காரணமாக காலேஜ் சாப்பிடாமல் திருப்பத்தையா லிங்காளா கிராமத்திற்கு சென்றுள்ளார். வேலை முடிந்ததும் அவருக்கு அதிகமாக பசி ஏற்பட்டது. இதனால் சென்னம்பள்ளி பகுதியில் இருக்கும் தள்ளுவண்டி கடைக்கு சென்று முட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

பசி அதிகமாக இருந்ததால் முழு முட்டையையும் விழுங்கியுள்ளார். இதனால் தொண்டையில் சிக்கி மூச்சு திணறி அங்கேயே மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் திருப்பத்தையா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.