பங்கு சந்தையில் முதலீடு…? 3 கோடி ரூபாய் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் மார்க்கெட் நிறுவனம் தொடங்கி பணம் செலுத்தினால் பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் பெற்று தருவதாக அறிவித்துள்ளார். இதனை நம்பி கடந்த 2016-ஆம் ஆண்டு பலர் கிருஷ்ணமூர்த்தியிடம் பணம் கொடுத்தனர்.

ஆனால் அவர் பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்யாமல் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.