பங்குனி உத்திர விரதம்…எப்படி கடைப்பிடிப்பது?… வாங்க பார்க்கலாம்…!!!

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பௌர்ணமி நிலவின் ஒளி வீசும் தினத்தை விரத நாளாகக் கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் பெரும். இந்த நன்னாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப் பெருமானை வணங்க வேண்டும். நாளை ஒருவேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தை ஆண் பெண் இருவருமே கடைபிடிக்கலாம்.

அதிகாலை குடித்துவிட்டு வீட்டில் பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து முருகன் துதிப் பாடல்களைப் பாடலாம். அன்று முழுவதும் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் மேற்கொள்வது சிறந்தது. முடிந்தால் பகல் வேளையில் ஏழை மற்றும் எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த நாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்குபவர் பலம் பெறுவார்கள். மேலும் மாலையில் அருகிலுள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உள்ள கோவில்களுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். அதன் பிறகு இரவில் அதிகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்வது சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *