பங்குனி உத்திரம்… சுபிட்சம் தரும் உன்னத வழிபாடு… வம்சம் தழைக்கும்…!!!

பங்குனி உத்திரத்தில் நம்முடைய பிரார்த்தனைகளை குலதெய்வத்திடம் வைத்து வேண்டிக் கொண்டால் குலதெய்வம் நிறைவேற்றி தரும். அனைத்து சௌபாக்கியங்களுடன் நம்மை வாழ வைக்கும் என்பது உறுதி. நாளை பங்குனி உத்திரம் என்பதால், இந்த நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வது மிக சிறந்தது. படையல் இடுவது அக்கம்பக்கத்தார் வழங்குவது போன்றவற்றை செய்தால் நம் அல்லல்கள் மொத்தமும் காணாமல் போகும்.

ஒருவரின் பிறவியில் மிக முக்கியமான வழிபாடு என்பது குலதெய்வ வழிபாடாக தான் இருக்கும். நம்முடைய குலம் வாழையடி வாழையாக வம்சம் வம்சமாக பரம்பரை பரம்பரையாக தெய்வத்தை வழிபட்டு கொண்டு வருவதுதான் குலதெய்வம். நம்முடைய துக்கங்கள் அனைத்தையும் தெய்வத்திடம் சொல்லி முறையிடுவோம். உங்களின் குலதெய்வம் கோயிலுக்கு சேர்ப்பதையும் குலதெய்வத்தை ஆராதித்து வணங்குவதையும் ஒருபோதும் விட்டுவிடக் கூடாது. மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குலதெய்வ வழிபாடு அவசியம்.

வீட்டில் இருந்துகொண்டே வீட்டில் இருந்தபடியே நாம் வம்சம் வம்சமாக குலதெய்வ வழிபாட்டை செய்யலாம். அதில் ஏதாவது ஒரு கிழமையை தேர்வு செய்து அந்த நாளில் நம்முடைய முன்னோர்களின் வழக்கப்படி வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதிலும் முக்கியமாக பங்குனி பவுர்ணமி உத்திரமும் இணைந்து அற்புதமான நாள் குலதெய்வ வழிபாட்டுக்கு ரொம்பவே உன்னதமான நாள்.

இந்த நாளில் அம்மை வீட்டை சுத்தப்படுத்தி, குலதெய்வ படங்களுக்கு மாலைகள் இட்டு அலங்கரிக்க இனிப்பு மற்றும் உணவுடன் படைகளிடம் வேண்டும். குலதெய்வம் படங்கள் இல்லை என்றால் வீட்டில் இருக்கும் சுவாமி படங்களை குல தெய்வமாக பாவித்து மலர்கள் கொண்டு அலங்கரித்து படையல் இட்டு குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வணங்க வேண்டும். நம்முடைய பிரார்த்தனைகளை குலதெய்வத்திடம் வேண்டிக் கொள்ள வேண்டும். பங்குனி உத்திரத்தில் இந்த குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *