தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது விழாவுக்கு வருகை தந்த விஜய் அங்கிருந்த கவிஞர்களுடன் இசை கருவிகளை வாசித்து மகிழ்ந்தார். பின்னர் விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இந்த பாடலை ஒரு சிறுமி பாடிய நிலையில் நடிகர் விஜய்யுடன் செல்பி எடுத்துக் கொள்ள விரும்பினார். ஆனால் அந்த சிறுமி தயங்கி தயங்கி வந்த நிலையில் உடனடியாக விஜய் சிறுமியை அருகில் அழைத்து கைக்கூலுக்கினார். செல்பி எடுத்து மகிழ்ந்தார். மேலும் அப்போது அங்கிருந்த தமிழக வெற்றிக்கழகத்தினார் ஆரவாரம் செய்தனர். நேற்று நடைபெற்ற விழாவில் தமிழக வெற்றி கழகத்தினர் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தா வந்துடாங்க 😍😍😍#தமிழகவெற்றிக்கழகம் #TVK
— Joseph Prabhu (@Jos_prabhu) December 6, 2024