பகுதி நேர பி.இ. படிப்பு…. இன்று(ஜூலை 4) முதல் விண்ணப்பம்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

2022-2023 ஆம் கல்வியாண்டில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பகுதி நேர பிஇ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டய படிப்பு முடித்து,பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பிஇ பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. தப்பாட்டம் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தவராக அல்லது பணி புரிபவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர் www.ptbe-tnea.com என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். ஜூலை நான்காம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.அரசினர் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641 013, அரசினர் பொறியியற் கல்லூரி சேலம் – 636 011, அரசினர் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி – 627 007, அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, காரைக்குடி – 630 004, தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, வேலூர் – 632 002, அரசினர் பொறியியல் கல்லூரி, பர்கூர் – 635 104, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் – 641 014, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை – 625 015. மேலும் விவரங்களுக்கு 0422-2590080, 9486977757 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *