2 ஓவரில் 5 நோபால்களை வீசி எதிரணிக்கு 37 ரன்களை வாரி வழங்கியதால் விமர்சனத்துக்குள்ளானார்..

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி நேற்று புனேயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் ஷானகா (56), குசால் மெண்டிஸ் (52), அசலங்கா (37),  நிஷாங்கா (33) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் சொதப்பினாலும் சூர்யகுமார் யாதவ் மாற்றம் அக்சர் படேல் சிறப்பாக ஆடினர். பின் சூர்யகுமார் யாதவ் (51) சிறப்பாக ஆடி அரைசதமடித்து அவுட் ஆனார். மேலும் அக்சர் படேல் தனி ஒரு ஆளாக மாவியுடன் சேர்ந்து போராடினர். ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. அக்சர் படேல் 65 ரன்களும், மாவி 26 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 190 ரன்கள் குவித்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.  இதனால் இரு அணிகளும் 1:1 என்ற கணக்கில் சமநிலை வைக்கிறது. 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பந்துவீச்சுதான்.. அக்சர் படேல், சாஹல், பாண்டியாவை தவிர வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவருமே ரன்களை வாரி வழங்கினர்.  அதில் சிவம் மாவி 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 53 ரன்கள் கொடுத்தார்.

அதேபோல உம்ரன் மாலிக் 4 ஓவரில் 3 விக்கெட் எடுத்தாலும் 48 ரன்கள் கொடுத்தார். இதில் குறிப்பாக அர்ஷ்தீப் சிங் மிகவும் மோசமாக பந்து வீசினார் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது அவர் 2 ஓவரில் 5 நோபால்களை வீசி எதிரணிக்கு 37 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இதனால் பாண்டியா அவருக்கு எஞ்சிய 2 ஓவர்களை வீச வாய்ப்பு கொடுக்கவில்லை, கடும் அப்செட்டில் இருந்தார். ரன் வாரி வழங்கியதை விட அவர் போட்ட நோபல் பாண்டியாவை சற்று நம்பிக்கை இழக்க செய்தது. அர்ஷ்தீப் சிங் இரண்டாவது ஓவரில் 3 நோபால் வீசி 19 ரன்களையும், 19வது ஓவரில் 2 நோபால் வீசி 18 ரன்களையும் வாரி வழங்கியதால் ரசிகர்கள் இவரை சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்..

https://twitter.com/OMTRIPA76524211/status/1611082982240161795