நோயாளிகள் இல்லை…. நள்ளிரவில் கொழுந்து விட்டு எரிந்த தீ…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கேத்தியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு நள்ளிரவு நேரத்தில் இரண்டு ஊழியர்கள் பணியில் இருந்த போது மருத்துவ உபகரணங்கள் இருந்த அறையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர்.

ஆனால் இந்த தீவிபத்தில் அறையில் இருந்த மருத்துவ உபகரணங்கள் எரிந்து நாசமானது. அந்த சமயம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *