“நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை”…. ரூ.23.40 லட்சம் மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி, கிரியம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நன்செய் நிலங்கள் அமைந்துள்ளது. இந்த நிலங்களை குத்தகைக்கு எடுத்தவர்கள் பல ஆண்டுகளாக பாக்கி தொகையை செலுத்தாமல் இருந்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் பலர் குத்தகை பாக்கி செலுத்தவில்லை. இதனால் திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் தலைமையில், கோவில் அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் 4.68 ஏக்கர் நிலங்களை மீட்டனர். இதன் மதிப்பு 23.40 லட்ச ரூபாய் ஆகும்.