நோட்டாவுக்கு கீழ்தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும்…. ஜெயக்குமார் விமர்சனம்…!!!

அதிமுக கூட்டணியில் பாஜக தற்போது இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவுடனான கூட்டணி குறித்து தேர்தல் வரும்போது முடிவு செய்யப்படும். அண்ணாமலை குறித்து இனி அதிமுக தொண்டர்கள் தாறுமாறாக விமர்சிப்போம்.

அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டு வருகிறார். தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் அண்ணாமலை வாக்கு வாங்குவார். தலைவர்களை விமர்சிப்பதை அண்ணாமலை நிறுத்தாவிட்டால் அதிமுக பதிலடி கொடுக்கும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply