உடலுக்கு சோம்பலை தரக்கூடிய வாழைப்பழத்தை நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவர்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது.
நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் வாழைப்பழம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் அவசியம். அவ்வாறு முறைதவறி சாப்பிட்டால் உடலின் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதன்படி வாழைப் பழங்களை நாம் உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும்.
நைட் ஷிப்ட் வேலை பார்ப்பவர்கள் இதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் உள்ள அமினோ அமிலங்கள், கார்போஹைட்ரேட் உடன் வினைபுரிந்து சோம்பலைத் தரும். மேலும் அஜீரண கோளாறை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அதனால் இதனை தவிர்ப்பது உடலுக்கு நல்லது. மற்ற நேரங்களில் இயல்பாக இதனை சாப்பிடலாம்.