நேற்று வரை டைட்டானிக் ரோஸை காதலித்தேன்… இன்று முதல்… விக்னேஷ் சிவனின் வைரல் டுவீட்…!!!

விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சார்பட்டா பரம்பரை படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை படம் ஜூலை 22-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸானது . 1970-களில் நடந்த வடசென்னை குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷபீருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் டான்ஸிங் ரோஸ் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘நேற்று வரை டைட்டானிக் ரோஸை காதலித்தேன். இன்று முதல் டான்ஸிங் ரோஸை காதலிக்கிறேன். சார்பட்டா பரம்பரை என்ன ஒரு அருமையான படம்’ என பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *