‘நேர்மை தான் ரொம்ப முக்கியம்’…. மாநகராட்சி ஊழியர்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிகாரி…!!

வேலூர் மாநகராட்சியின் கமிஷனராக பணியாற்றி வந்த அசோக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை சிப்காட் பொது மேலாளராக பணியாற்றி வந்த பி.ரத்தினசாமி என்பவர் அவருக்கு பதில் நேற்று நியமிக்கப்பட்டார். பின் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்தனர். மேலும் இனிப்புகள் மற்றும் பழங்கள் வழங்கி வாழ்த்துக்களையும்  தெரிவித்துள்ளனர்.

அப்போது அவர் ஊழியர்களிடம் கூறியுள்ளதாவது, நேர்மையுடன் நாம் மக்களுடன் நேரடி தொடர்பில் அனைவரும் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். இந்நிலையில்  புகார்கள் ஏதும் வரக்கூடாது. அப்படி ஏதும் புகார்கள் வராமல் செயல்பட வேண்டும். காலதாமதம் ஏற்படாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும் என்றும்  மக்களை நாம் சந்திக்கும்போது மிகவும் பொறுமையோடு அவர்களிடம் பேச வேண்டும். அனைவரும் சிறப்பாக பணியாற்றுங்கள். மேலும் தங்களது தனிப்பட்ட குறைகள் மற்றும் புகார்கள் ஏதேனும் இருப்பின் என்னை வந்து நேரில் சந்தித்து கூறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் மாநகராட்சி மேயர் சுஜாதாவை சந்தித்து பணிகளை குறித்து கலந்துரையாடினார்.

இவர் மயிலாடுதுறை உதவி கலெக்டராகவும், நாகப்பட்டினம் கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.