நேரடியாக களத்தில் மோதும் விஐபி வேட்பாளர்கள் – அதிமுக VS திமுக நட்சத்திர தொகுதி …!!

அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் நேருக்கு நேராக மோதி  கொள்ளும் முக்கிய வேட்பாளர்களின் பட்டியலின் தொகுப்பு

எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் களமிறங்கியுள்ளார். இதை போல போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் களமிறங்கியிருக்கும் நிலையில், அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக ஆதிராஜாராம் போட்டியிடுகிறார்.

காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகன் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ராமு போட்டியிடுகிறார். சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக வேட்பாளர் கசாலி களம் காண்கிறார். விழுப்புரம் தொகுதியில் அதிமுக அமைச்சர் சி.வி சண்முகத்தை எதிர்த்து திமுக சார்பில் டாக்டர் லட்சுமணன் போட்டியிடுகிறார். விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து திமுக சார்பில் பழனியப்பன் போட்டியிடுகிறார்.

ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து திமுக சார்பில் மூர்த்தி போட்டியிடுகிறார். பொள்ளாச்சி தொகுதியில் துணை சபாநாயகரான ஜெயராமனை எதிர்த்து திமுக சார்பில் டாக்டர் வரதராஜன் போட்டியிடுகிறார். வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஓ.எஸ் மணியனை எதிர்த்து திமுக சார்பில் வேதரத்தினம் களமிறங்குகிறார். இதேபோல் நன்னிலம் தொகுதியில் அமைச்சர் காமராஜை எதிர்த்து திமுக சார்பில் ஜோதி ராமலிங்கம் போட்டியிடுகிறார்.

குமாரபாளையம் தொகுதியில் அமைச்சர் தங்கமணியை எதிர்த்து திமுக சார்பில் வெங்கடாசலம் களமிறங்குகிறார். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையனை எதிர்த்து திமுக சார்பில் மணிமாறன் போட்டியிடுகிறார். ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணியை எதிர்த்து திமுக சார்பில் தேவராஜ் களம் காண்கிறார். திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக கே.என் நேரு களமிறக்கபட்டுள்ள நிலையில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பத்மநாபன் போட்டியிடுகிறார். சென்னையின் முன்னாள் மேயர்களாக இருந்த அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியும், திமுக வேட்பாளர் சுப்ரமணியன்யும் சைதாப்பேட்டை தொகுதியில் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *