நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் கவினின் ‘லிப்ட்’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின். இவர் தமிழ் திரையுலகில் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிப்ட் படத்தில் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை எக்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Image

கடந்த ஏப்ரல் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் லிப்ட் திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நாளை இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *