நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் ‘சாணிக் காயிதம்’?… வெளியான தகவல்…!!!

செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தற்போது இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது.

 

Saani Kaayidham (2021) - IMDb

தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாணிக் காயிதம் படம் நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.