“நேரடியாக அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க”… சினிமா அனுபவத்தை பகிர்ந்த கார்த்தி பட நடிகை…!!!

நடிகை ஜீவிதா தனது சினிமா அனுபவங்கள் பற்றி பகிர்ந்துள்ளார்.

படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து பிரபலமாக வலம் வருபவர் நடிகை ஜீவிதா. இவர் பல தொடர்களிலும் நடித்து வருகின்றார். சென்ற 2018 ஆம் வருடம் பாண்டிராஜ் இயக்கத்தில் ரிலீசான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்திருப்பார் ஜீவிதா. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “எனக்கு சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதை எல்லாம் நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதற்கு காரணம் மேனேஜர் நேரடியாக, அவர் சொல்லும் ஆட்களிடம் அட்ஜஸ்ட் பண்ணுமாறு கூறினார். அவர்கள் சொல்லும் நபர்களிடம் அட்ஜஸ்ட் செய்தால் நல்ல கதாபாத்திரம் நல்ல சம்பளம் கிடைக்கும் என்பார்கள். எல்லா கலைஞர்களுக்கும் இப்படி நடக்கும் என்று கூற முடியாது. சில இடத்தில் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கின்றது. சிலர் நேரடியாகவே அட்ஜஸ்ட் பண்ண சொல்லுவார்கள். நான் அவர்களின் முகத்தை பார்த்து நேரடியாகவே முடியாது என கூறிவிடுவேன். நான் தைரியமான பொண்ணு என்பதால் சமாளித்து விட்டேன். ஆனால் என்னுடைய இடத்தில் வேறு யாராவது இருந்தால் கஷ்டப்பட்டு இருப்பார்கள்” என உருக்கமாக பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *