நெல்சன் மண்டேலாவின் பேத்தி கோலோகா மண்டேலா (43) காலமானார். தனது தாத்தா போலவே, மக்களுக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கோலோகா மண்டேலா, இடுப்பு, கல்லீரல், நுரையீரல், மூளை மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றில் மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு உலகம் முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்