நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் “ஜெயிலர்” படம்…. பிரபல நடிகர் இணைய உள்ளதாக வெளியான தகவல்…!!!!!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது.

இத்திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு இணைய இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே நெல்சன் இயக்கிய மூன்று திரைப்படங்களில் நடிகர் யோகி பாபு நடித்த நிலையில் தற்போது நான்காவது திரைப்படத்திலும் யோகி பாபு நெல்சனுடன் கைகோர்க்கின்றார். இதனால் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது. மேலும் ஜெயிலர் திரைப்படத்தின் படபிடிப்பானது விரைவில் தொடங்கும் என கூறப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *