‘நெற்றிக்கண்’ பட இயக்குனருடன் இணைந்த ராணா… வெளியான செம அப்டேட்…!!!

நடிகர் ராணா அடுத்ததாக மிலிந்த் ராவ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தவர் ராணா. இந்நிலையில் ராணா அடுத்ததாக நடிக்கும் படத்தை மிலிந்த் ராவ் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணா - மிலிந்த் ராவ்

தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை அர்ஜுன் தஷ்யன், கோபிநாத் அச்சந்தா, ராம்பாபு சோடிசெட்டி இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் வீடன்ஸ் கிரியேட்டிவ் ஒர்க்ஸ், ஸ்பிரிட் மீடியா நிறுவனம் விஷ்வ சாந்தி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை வழங்குகிறது. வருகிற 2022-ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *