நெருக்கடியில் மத்திய அரசு…. கேஸ் சிலிண்டர் மானியம் குறித்து…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது வழக்கம். கொரோனா காலகட்டத்தில் மட்டுமே நான்கு முறை சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் பங்குச்சந்தை வெகுவாக சரிவடைந்துள்ளது. அந்த நாட்டில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளதால் சிலிண்டர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.

எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை 1000 ரூபாயை தாண்டி சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் சிலருக்கு மானியம் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிலிண்டர் மானியம் பெறுவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது.மானியம் இல்லாமல் சிலிண்டர்களை வழங்கலாம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோருக்கு மட்டும் சிலிண்டர் வழங்கலாம் என்று ஏதேனும் ஒரு திட்டத்தை அரசு மேற்கொள்ள அதிகம் வாய்ப்புள்ளது.

இந்த மானியத்தின் மூலமாக வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 10 லட்சம் தீர்ப்பில் இருக்கவேண்டும். கடந்த பல மாதங்களாக எல்பிஜி சிலிண்டருக்கான மானியம் பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பத்து லட்சம் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும் என்ற விதி அமலில் இருக்கும் என்றும் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் மானியத்தின் பலனை தொடர்ந்து பெறுவார்கள் என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது.