நெட்பிளிக்ஸ் தந்த சர்ப்ரைஸ்….. விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் திரை பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்டில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே இவர்களின் திருமண வீடியோ ரிலீஸ் உரிமையை நெட் பிலிக்ஸ் நிறுவனம் 25 கோடி ரூபாய்க்கு பெற்றது. இந்நிலையில் திருமண வீடியோவின் டீசரை netflix நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தங்களது காதல் அனுபவங்களை கூறியுள்ளனர். இதனால் திருமணத்தின் முழு வீடியோவை பார்க்க ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.