பொதுவாகவே நெடுஞ்சாலைகளை நடுவே செவ்வரளி செடிகள் வளர்க்கப்படுவதை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் ஏன் இந்த செடியை சாலைகளின் நடுவே ஏன் வளர்க்கிறார்கள் என சிந்தித்துப் பார்த்து உள்ளீர்களா? உண்மையில் இதனை நெடுஞ்சாலைகளில் வளர்ப்பதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் உள்ளது. அதாவது செவ்வரளி செடியில் உள்ள இலைகள் மற்றும் மலர்கள் காற்றை சுத்திகரிக்கும் தன்மை கொண்டவை. அது காற்றில் உள்ள கார்பன் துகள்களை நீக்கி காற்றை புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டது.

இதனால் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது வாகன புகையையும் தாண்டி சுத்தமான காற்று மக்களுக்கு கிடைக்கும். இதனால் தான் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் அதிகமான அளவில் செவ்வரளி செடிகள் வளர்க்கப்படுகின்றன. நெடுஞ்சாலைகளில் எந்த நேரமும் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையிலிருந்து கார்பன் நச்சு கழிவு சூழலில் பரவி காற்று மாசை ஏற்படுத்தும். செவ்வரளி தாவரங்கள் காற்று மாசுபாட்டை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவை வறண்ட பகுதியில் வளரக்கூடியவை. இதனால் யாரும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. மண் அரிப்பை கட்டுப்படுத்துவதிலும் இரைச்சல் மாசுவை கட்டுப்படுத்துவதிலும் இந்த தாவரத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இது போன்ற அறிவியல் காரணங்களால் தான் நெடுஞ்சாலைகளில் இந்த தாவரம் வளர்க்கப்படுகின்றது.