நெஞ்சுவலியை பொருட்படுத்தாத கண்டக்டர்…. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

ஓடும் பேருந்தில் கண்டக்டருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுப்பிரமணி(47) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் ஜெயபாலன்(52) என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் புறவழிச் சாலையை பேருந்து கடந்த போது திடீரென ஜெயபாலனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதனை பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து பணி செய்துள்ளார். இதனை அடுத்து கொள்ளர் மெயின் ரோட்டில் பேருந்து வந்த போது நெஞ்சுவலி அதிகமானதால் ஜெயபாலன் மயங்கி விழுந்துவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி பேருந்தை ஓரமாக நிறுத்தி பயணிகள் உதவியுடன் ஜெயபாலனை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் பயணிகள் மாற்று பேருந்தில் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *