நூக்கல் சாப்பிடுவதன் நன்மைகள்… வியக்க வைக்கும் மருத்துவ குணம்…!!!

உடலிலுள்ள பல நோய்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் நூக்கள் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதன்படி நூக்கல் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. தாய்ப்பால் நன்றாக சுரக்க உதவுகிறது. நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் இன்னும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.