“நீர் வழிபாதை ஆக்கிரமிப்பு”… பயிர்கள் சேதமாகி நஷ்டம்… ஆர்.டி.ஓ -விடம் விவசாயிகள் மனு…!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தை அடுத்த சின்னக்கம்பாளையம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த  விவசாயிகள் ஆர்.டி.ஓ குமரேசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, சுமார் நூற்றாண்டு பழமை வாய்ந்த குளம் ஒன்று சின்னக்கம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. அந்த குளத்திற்கு ஊத்துப்பாளையம் கிராமத்தில் இருந்து மழை நீர் சின்னக்கம்பாளையம் கிராமம் பாதை வழியாக சின்ன புத்தூர் கிராம எல்லைக்குட்பட்ட பஞ்சபட்டியில் உள்ள சின்னக்கரை ஓடையில் கலக்கிறது.

இந்நிலையில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்த வழியாக செல்லும் ஓடையில் நீர்வழி பாதையை ஆக்கிரமித்து 25 ஏக்கர் நிலத்தை சமன் செய்து அதில் கிராவல் மண் கொண்டு வந்து கொட்டி நீர்வழி பாதையை அடைத்திருக்கின்றார். இதனால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து   பயிர்கள் சேதமடைந்துள்ளது. அதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் நீர் வழிப் பாதையை தடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அந்த  புகார் மனுவை பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.