நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த கேஆர் விஜயா…. வெளியான தகவல்….!!!!

தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் சார்பாக பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, ரவி பார்கவன் டைரக்டில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான படம் தான் “மூத்தகுடி”. இத்திரைப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பழம்பெரும் நடிகையான கேஆர் விஜயா மீண்டும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு இப்படத்தில் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் கதாநாயகன் தருண்கோபி, ஆர்.சுந்தர்ராஜன், ராஜ் கபூர், சிங்கம்புலி, யார் கண்ணன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். அறிமுக நாயகி அன்விஷா நாயகியாக இந்த படத்தில் அறிமுகமாகிறார். இந்த படம் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.