நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம் எழுதி உள்ளது.
நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மத்திய உள்துறை ஆயுஷ் அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழக அரசு அனுப்பிய உடனே மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக ஆயுஷ் அமைச்சகம் வழியாக தமிழக அரசுக்கு விளக்க கடிதம் அனுப்பி இருந்தார்கள். அதற்கு ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழக சுகாதாரத்துறை மத்திய அரசுக்கு விளக்கம் அளித்திருந்தது. கிட்டத்தட்ட 10 கேள்விகளை கேட்டிருந்தார்கள். அதில், எதற்காக நீட் விலக்கு தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் 10 கேள்விகள் வரை கேட்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு கேள்விக்கும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று தமிழக சுகாதாரத்துறை மத்திய அரசுக்கு விளக்கம் கொடுத்திருந்தார்கள். அந்த விளக்கத்தை ஏற்று இருந்தாலும் மீண்டும் ஒரு விளக்க கடிதத்தை மத்திய அரசு தரப்பில் இருந்து தமிழக சுகாதாரத்துறைக்கு நீட் விலக்கு தமிழ்நாட்டுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மீண்டும் ஒரு விளக்க கடிதத்தை கேட்டிருக்கிறார்கள்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஓரிரு வாரங்களில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று மறுபடியும் விளக்க கடிதத்தை அனுப்ப இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சற்றுமுன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதில் என்னென்ன கேள்விகள் மறுபடியும் கேட்டுள்ளார்கள். அதற்கு எந்த மாதிரியான பதில்களை வல்லுனர்களின் ஆலோசனை பெற்று அளிக்கவுள்ளோம் என்கிற விளக்கத்தை இன்னும் சிறிது நேரத்தில் 12:30 மணியளவில் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருக்கக்கூடிய மருத்துவத்துறை அமைச்சருடைய இடத்திலிருந்து செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்க இருக்கிறார்.. அதில் அவர் விளக்கமாக கடைசியாக என்ன கேள்வி கேட்கப்பட்டது அதுக்கு என்ன பதில் கொடுத்தோம்? மறுபடியும் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்படும், அதில் என்ன மாதிரியான தயார் செய்து பதில்களை கொடுக்க போகிறோம் என்கிற விரிவான விளக்கத்தை அமைச்சர் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.