நீட் தேர்வில் விலக்கு….. தமிழக அரசு உறுதி…. அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி…..!!!!

தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கில் உறுதியாக இருப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகள் எழுப்பியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் அமைச்சர் மா. சுப்ரமணியம் ஆய்வு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “1982 ஆம் ஆண்டு திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில் 300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றன. 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் பேராசிரியர்கள் தங்களுக்கு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இதை தொடர்ந்து தற்போது ஆய்வு செய்ய இங்கு வந்துள்ளேன். 60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட வளாகம் கட்டப்படும். அந்த பணிகள் நிறைவடைய இரண்டு ஆண்டுகள் ஆகும். அதுவரை கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அருகே உள்ள விருதுநகர் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சிலர் ஆணையரை அனுமதி பெறும் படி வலியுறுத்தியுள்ளேன். தமிழக அரசு நீட் தேர்வு விலக்கில் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சிலர் கேள்வி கேட்டுள்ளது. அதற்கு தமிழக அரசு சார்பில் இருந்து பதிலளிக்கப்படும். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *