இந்திய ரிசர்வ் வங்கியானது போலி நோட்டுகளை அடையாளம் காண பயன்படுத்தக்கூடிய சரிபார்ப்பு பட்டியலை வெளியிட்டு உள்ளது. உங்களின் 500ரூபாய் நோட்டு உண்மையானது தானா என்பதனை கண்டறிவது பற்றி இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

# 500 என்ற மதிப்பை கொண்ட ஒரு தெளிவான பதிவு(see-through register).

# 500 என்ற மதிப்பை கொண்ட மறைவுபடம் (லேடண்ட் இமேஜ்).

# அதன்பின் தேவனாகிரி எழுத்தில் 500 என்ற எண்.

# மையத்தில் மகாத்மா காந்தியின் உருவப் படம்

# பாரத்(தேவ்நாகிரியில்) மற்றும் “இந்தியா” போன்றவை மைக்ரோ எழுத்துகளாக இருக்கும்.

# பாரத் (தேவ்நாக்ரியில்) மற்றும் ஆர்பிஐ போன்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கலர் ஷிஃப்ட் விண்டோ பாதுகாப்பு த்ரெட்.

# நோட்டை சாய்த்தால், பாதுகாப்பு த்ரெட் பச்சை நிறத்திலிருந்து நீலநிறமாக மாறும்.

# உத்தரவாத ஷரத்து வாக்குறுதியின் உட் பிரிவுடன் ஆளுநரின் கையொப்பம் மற்றும் மகாத்மா காந்தியின் உருவப் படத்தின் வலது புறத்தில் ரிசர்வ் வங்கியின் சின்னம்.

# மகாத்மா காந்தி உருவப்படம் மற்றும் எலக்ட்ரோ டைப்பின் வாட்டர்மார்க்ஸ்(500)

# கீழ் வலது புறத்தில், நிறத்தை மாற்றும் மையில் (பச்சை முதல் நீலம் வரை) ரூபாய் சின்னத்துடன் (ரூ. 500) மதிப்புள்ள எண்.

# அசோகர் தூண் சின்னம்

# பார்வையற்றவர்களுக்கான சில அம்சங்கள்: மகாத்மா காந்தியின் உருவப்படம், அசோகர் தூண் சின்னம், வலதுபுறம் மைக்ரோடெக்ஸ் ரூபாய். 500 உடன் வட்ட அடையாளக் குறி, இடது மற்றும் வலது பக்கங்களில் 5 கோண பிளீட் கோடுகள்.

# ரூபாய் நோட்டின் இடது புறத்தில் நோட்டு அச்சிடப்பட்ட வருடம்.

# ஸ்வச்சபாரத் லோகோவும் (சின்னமும்) அதன் சொற்றொடரும் (ஸ்லோகன்).

# பின் ரூபாய் நோட்டின் மத்தியில் மொழிகளின் பேனல்.

# செங்கோட்டை-இந்திய கொடியுடன் காணப்படும் இந்திய பாரம்பரிய தளம்.

# வலது புறத்தில் தேவநாகிரியில் ரூபாய் மதிப்பு எண்.