நீங்க நல்லா விளையாடுறீங்க… ஆரியுடன் அதிரடி பிளான் போட்ட பாலா… வெளியான இரண்டாவது புரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் போட்டியாளர்களுக்கு பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டது . இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிய வேண்டும் . கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள குழாயின் வழியாக பந்துகள் அனுப்பப்படும் . சிறிய பந்துகளுக்கு 5 மதிப்பெண் ,பெரிய பந்துகளுக்கு 10 மதிப்பெண் ,அதைவிட பெரிய பந்துகளுக்கு 20 மதிப்பெண் .

போட்டியாளர்கள் எத்தனை பந்துகளை பிடிக்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு அவர்கள் அணிகளில் மதிப்பெண் ஏறிக்கொண்டே இருக்கும் . தற்போது வெளியாகியுள்ள 2-வது புரோமோவில் பாலா குழாயிலிருந்து வரும் பால்களை தள்ளி விடுவதாக சோம் குற்றஞ் சாட்டுகிறார் . இதனால் கடுப்பான பாலா ஆரியுடன் திட்டம் போடுகிறார் . நீங்க நல்லா விளையாடுறீங்க , நான் முன்னாடி நின்னு பந்து பிடிக்கிறேன் என்று ஆரியிடம் ஆலோசனை கூறுகிறார் பாலா.