நீங்க டுவிட்டரில் இருக்கீங்களா… இதோ கணக்கு தொடங்கும் வழிமுறை… படிச்சு தெரிஞ்சுகோங்க…!!

ட்விட்டர் (Twitter) கணக்கை திறப்பதற்கான முறைகள் பற்றி இதில் பார்ப்போம்.

முதலில் Google-ல் Twitter என Search பண்ண வேண்டும். பின்னர் அதில் வரும் Login on Twitter என்ற Link-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

அதில் புதியதாக கணக்கை திறப்பதற்கு நீங்கள் Sign Up for Twitter என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இப்பொழுது புதிதாக கணக்கை திறப்பதற்கு உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் போன்ற தகவல்களை பதிவிட்டு Next Button-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு Terms & Condition-ஐ நன்றாக படித்து விட்டு Sign Up Button-ஐ கிளிக் செய்ய வேண்டும்

Twitter கணக்கை உறுதி செய்வதற்காக நீங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு OTP (One Time Password) வழங்கபட்டிருக்கும். அதனை உள்ளீடு செய்து உங்களுக்கான தரமான கடவுச் சொற்களை (Password) கொடுக்க வேண்டும்.

இப்பொழுது உங்களுக்கான Twitter கணக்கு திறக்கப்பட்டதை அறிந்து கொள்ள முடியும். முடியும். இதில் உங்களின் புகைப்படம் மற்றும் சுய விபரங்களை பதிவீடு செய்ய வேண்டும்.

இதுபோன்று உங்களின் தொலைபேசியில் Play store-ல் Twitter செயலியை தரவிறக்கம் செய்து Twitter கணக்கை திறந்து அதன்மூலமாகவும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இனியதள முகவரி : https://twitter.com/login

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *