நீங்க கஷ்டப்பட வேண்டாம்… எல்லாம் தயாரா இருக்கு… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

தேர்தல் நாளன்று முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த 900 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்குப்பதிவு மையங்களில் வாக்களிக்க ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையம் சக்கர நாற்காலிகள் அமைத்துக் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 900 சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் சக்கர நாற்காலிகளை இயக்குவதற்காக தன்னார்வலர்கள் அமைப்பின் மூலம் இரண்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாக்குச்சாவடி மையங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் தங்குதடையின்றி வாக்களிக்க ஏதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கான தனிவரிசை, சாய்வு தள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவர பட்டியலை பார்வையற்ற வாக்காளர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் விதமாக பிரெய்லி முறையில் அச்சடிக்கப்பட்ட படிவங்கள் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.