நீங்க ஒன்னும் செய்ய வேணாம்…… அதுவே தான பண்ணிடும்…… வாட்சப் புதிய அப்டேட்…..!!

வாட்ஸ்அப்பில் தானாக மெசேஜ்களை டெலிட் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை  தானாக அழிக்கும் புதிய தொழில்நுட்பத்தை வாட் சப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்ஷனை பீட்டா வெர்ஷன்களில் மட்டும் தற்போதைக்கு நடைமுறைப்படுத்தி உள்ள வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் நாம் பயன்படுத்தும் நார்மல் வெர்ஷன்களிலும்  இதனை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய வசதியின் மூலம் நாம் அனுப்பும் மெசேஜ் எத்தனை நிமிடத்தில் தானாக டெலிட் செய்ய பட வேண்டும் என்பதை நாமே செட் செய்து கொள்ளலாம். இது போன்ற ஆப்ஷன்களை எங்களுக்கு வழங்குமாறு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திதன் காரணமாகவே இதனை நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.