பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மிருணாள் தாக்கூர். இவர் தென்னிந்திய சினிமாவில் துல்கர் சல்மான் நடித்த சீதாராமம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை மிருணாள் தாக்கூரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்த நிலையில் அவருக்கு தென்னிந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில் சீதாராமம் படத்தில் ஹோம்லியாக நடித்த மிருணாள் தாக்கூர் பாலிவுட் படங்களில் தாராளமாக கவர்ச்சி காண்பித்து நடிப்பார். இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் அடிக்கடி இன்ஸ்டாகிராமிலும் வெளியாகி வைரலாகும்.
அந்த வகையில் நடிகை மிருணாள் தாக்கூரின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாக அதற்கு ரசிகர் ஒருவர் மோசமாக கமெண்ட் செய்துள்ளார். அதாவது உங்கள் பின்னால் இருக்கும் கொழுப்பை குறைக்க வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு மிருணாள் தாக்கூரும் பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார். அவர் சிலர் அதற்காக காசு கொடுத்து உருவாக்குகிறார்கள். இயற்கையாக இருப்பவர்கள் அதை அப்படியே flaunt செய்கிறார்கள். நீங்களும் அதையே செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.