நீங்களும் சிரமம் இல்லாம ஓட்டு போடலாம்…. தபால் வாக்களித்த தேர்தல் ஊழியர்கள்…. தேனியில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!

தேனியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தபால் வாக்கினை பதிவு செய்தனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் 100 சதவீத வாக்குபதிவை முன்னிட்டு அனைத்து தொகுதிகளில் இருக்கும் ஊனமுற்றவர்களும் மூத்த குடிமக்களும் வாக்களிக்கும் விதமாக தேர்தல் குழு தபால் ஓட்டினை வழங்கியது.

இந்நிலையில் தற்போது தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவரும் வாக்களிக்கும் விதமாக தபால் ஓட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்திலிருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சுமார் 7,492 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் 5,005 பேருக்கு தபால் வாக்குப்பதிவு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2,936 பேர் தபால் வாக்குகள் செலுத்தினர்.