இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் செல்போன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனைப் போலவே சில விலங்குகளும் மனிதனைப் போலவே நடந்து கொள்வது பற்றிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அமைச்சர் ஒருவர் வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில்,டிஜிட்டல் கல்வி அறிவு விழிப்புணர்வு நம்ப முடியாத நிலையை எட்டி வெற்றியை பாருங்கள் என்று தலைப்பு எழுதி அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார்.

அந்த வீடியோவில் ஒரு மனிதன் ஸ்மார்ட்போனை வைத்திருக்கும் வீடியோ தொடங்கும் பட்சத்தில் அப்போது மூன்று குரங்குகள் அங்கு ஆர்வத்துடன் மனிதர்கள் தங்கள் தொலைபேசிகளை எப்படி பார்ப்பார்களோ அவ்வாறு குரங்குகளும் கவனமாக செல்போனை பார்க்கின்றன. செல்போன் திரையை சுவாரஸ்யமாக நகர்த்தி பார்த்துக் கொண்டிருக்கும்போது மற்றொரு சிறிய குரங்கு வயதான குரங்கு இழுத்து அதன் கவனத்தை மாற்ற முயற்சி செய்கின்றது. மனிதனைப் போலவே சுவாரசியமாக குரங்குகள் செல்போனை பயன்படுத்தும் காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.