நில அபகரிப்பு வழக்கு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன் குமார் மற்றும் அவரது சகோதரர் மகேஷ் இடையே  8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக பிரச்சனை உள்ளது. இதுதொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் நிலஅபகரிப்பு வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது 4 வாரங்களில் பதில் அளிக்க அதிமுக முன்னாள் அமைச்சருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயக்குமார் இன்னும் அமைச்சராக இருக்கிறாரா என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் ஜெயக்குமார் உள்ளிட்ட எதிர் மனுதாரர்களும் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது..