
தனுஷ் அவர்கள் ராயன் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இன்றைய காலகட்டத்தின் காதலை பேசும் படமாக அமைந்த இது பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் சகோதரியின் மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் அஜித்தின் ரீல் மகளான அனிகா சுரேந்திரன் தான் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
அதில் நமது சர்வதேச நடிகரான தனுஷுடன் சேர்ந்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை பார்த்ததாகவும் படம் பொழுதுபோக்கு நிறைந்ததாகவும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிபூர்வமாக தனித்துவமாக இருந்ததாகவும் பாராட்டியுள்ளார்.

மேலும் தனுஷிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும் எப்படி இவ்வளவு பணிகளுக்கிடையே இப்படி ஒரு படத்தை இயக்க முடிந்தது என்று கேட்டதோடு படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.