பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற நிலையில் இன்று சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் அன்றைக்கு சொன்னது போன்று இப்போதும் விஜயின் அரசியல் வருகையை வரவேற்கிறோம். ஆனால் விஜய் புதிதாக எதுவும் சொல்லவில்லை. திராவிட சித்தாந்தங்களை மட்டும் தான் அவர் பேசுகிறார்.

ஆனால் நடிகர் விஜயின் அரசியல் வருகையால் தமிழக மக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் விஜய் அக்டோபர் மாதத்திற்கு பிறகு எத்தனை முறை வெளியே வந்துள்ளார். ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பவர் மக்களுக்காக 365 நாட்களும் களத்தில் இருக்க வேண்டும். ஒரு நடிகராக உச்சத்தில் இருந்து தற்போது அரசியலுக்கு வந்துள்ள விஜய் மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

அதே சமயத்தில் அவர் புதிதாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தை மட்டுமே பேசி வருகிறார். விஜயின் பேச்சு திராவிட கொள்கைகளோடு ஒத்துப்போவதால் அவருடைய அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்பதை நாம் அனைவரும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெற்றி தோல்விகள் என்பது வந்து கொண்டிருக்கும் என்பதால் விஜய் அதற்கெல்லாம் எப்படி தன்னை தயார்படுத்திக் கொள்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.மேலும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டின் போது நடிகர் விஜய் நிறைய பேசிவிட்டார். அவருக்கு எங்க கட்சியின் தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்டிப்பாக அதற்கு நானும் விளக்கம் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.