உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த வருடங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பணி நீக்கங்களை மேற்கொண்டு வந்தது. மேலும் புதிதாக ஊழியர்களை பணியமர்த்தலையும் முடக்கியுள்ளனர். இந்நிலையில் 2023 -ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போதும் பணி நீக்கங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் தொடங்கி 20 நாட்களை முடிவடைந்துள்ள நிலையில் amezon, Google, Intel, Microsoft போன்ற நிறுவனங்கள் தற்போது பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர்.
இதில் அமேசான் நிறுவனம் ஆயிரம் பணியாளர்கள் உட்பட உலகம் முழுவதும் சுமார் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. அதேபோல் google நிறுவனத்தின் தலைமை நிறுவனமான alphabet 12,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனமும் பொருளாதார நிலமைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் முன்னுரிமைகளை மாற்ற இருப்பதாக கூறி தன்னுடைய நிறுவனத்தின் ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்டெல் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் பணிநீக்கம் செய்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போது பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.