“நிறுத்தப்படும் நிலக்கரி உற்பத்தி” ஒப்புதல் அளித்த 40 நாடுகள்…. கையெழுத்திட மறுத்த இந்தியா….!!

இந்தியாவின் மொத்த மின் தேவையில் 70%/ நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் ஆலைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. காலநிலை மாற்றத்தில் அதிகமாக கார்பனை வெளியிடும் நிலக்கரியின் பங்கு வகிக்கிறது. அதனால் மரபுசாரா எரிசக்தியை ஊக்குவிக்க உலகநாடுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிற நிலையில், காலநிலை மாற்றத்தை தடுப்பதற்காக நிலக்கரி உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காலநிலை மாற்ற பாதிப்பை தடுக்கும் வகையில் நிலக்கரி உற்பத்தியை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் உலகின் 40 நாடுகள் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் புதிய நிலக்கரி அமைக்கும் முடிவையும் கைவிட்டதாக இந்தோனேசியா, தென் கொரியா போன்ற 23 நாடுகள் அறிவித்துள்ளது. ஆனால் அதிகமான கார்பன் வெளியிட்ட கொண்டுள்ள உலகின் முன்னணி நாடுகளான இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் நிலக்கரி உற்பத்தியை உடனடியாக நிறுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் 2040 ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக நிலக்கரி உற்பத்தியை நிறுத்துவதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *