நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பதவி ராஜினாமா…. என்ன ஆசாத்?…. அரசியலில் தீயை கிளப்பிய செய்தி….!!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். இவர் அகில இந்திய அரசியல் விவகார குழு உறுப்பினர் ஆவார். அதுமட்டுமில்லாமல் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி, முன்னாள் மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இந்நிலையில் நேற்று குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரில் பிரச்சார குழுவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலே ஆசாத் பொறுப்பே ராஜினாமா செய்தார். இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து தலைவர் பதிவி மட்டும் இல்ல, மாநில அரசியல் விவகார குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்து உள்ளார். மேலும் தலைமை மாற்றம் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவிலும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.