நினைவாற்றல் திறன் அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்..!!

ஞாபகசக்தி ரொம்ப ரொம்ப முக்கியம். அதுவும் இந்த தேர்வு நேரம் எல்லோருக்குமே நினைவாற்றல் ரொம்பவே அதிகமாக இருக்க வேண்டும். அதற்காக தான் ஒரு டிப்ஸ் பார்க்கலாம்..!

தேவையான பொருட்கள்:

  • ஒரு கைப்பிடி அளவிற்கு –  சிறுகீரை
  • மஞ்சள்தூள்                             – ஒரு டீஸ்பூன்
  • உப்பு                                           – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்றாக சூடேறியதும் நாம் எடுத்து வைத்திருக்கும் ஒரு கைப்பிடி சிறு கீரையை தண்ணீரில் சேர்த்துக் கொள்ளலாம். இதோடு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இவை அனைத்தையும் சேர்த்து கலக்கி விடுங்கள், இப்பொழுது ஒன்றரை கப் தண்ணீர் ஒரு கப் அளவிற்கு வரும் அளவிற்கு  வற்ற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை வடிகட்டி மிதமான  சூடாக ஆறவைத்து வாரத்திற்கு இரண்டு முறை குடித்து வாருங்கள். எப்பொழுது வேண்டுமென்றாலும் குடிக்கலாம். ஆனால் இரண்டு முறை வாரத்திற்கு குடித்து வாருங்கள் இது நினைவாற்றலை அதிகரிக்கும்.